Monday, November 05, 2007

கனவு தேவதை!!!

காலை நேரம் விழியின் ஒரம்
கனவு பூத்தது இதய தென்றலின் ஒசையில்
மெல்ல திறந்தது ஆசை என்னும் கதவு
சொல்ல துடித்தது இதழ்களின் புன்னகை!!!

விண்ணின் நட்சத்திரம் என் விழியில் மிளிர்ந்ததே
கண் மணியின் ஏக்கம் என் கண்மணிக்கு ஏன் புரியவில்லையோ??
இதயம் துடிக்க மறுத்ததே நீ செவி சாய்க்காமல் போனதால்
இனியும் தாமதிக்காதே என் நெஞ்சம் சாய்ந்து விடும் கண்ணே!!!

புறம் காட்டி செல்லும் பெண்ணே
உன் முகம் காண விழைகிறேன்
நீ புல்லாங்குழலில் நுழைந்த காற்றோ??
இசை என்னும் பரிமானத்தில் என்னுள் எழுகிறாய்!!

காற்றில் உன் வாசம் நுகர்ந்தேன்
நெஞ்சில் உறங்கும் என் நேசம் பகிர்வாய்
என் மனதில் உன் பிம்பங்கள்
உன் நினைவில் கோடி இன்பங்கள்!!

உன் முத்து சிரிப்பின் சப்தத்தில்
பித்து பிடித்தது என் நெஞ்சம்
விரைந்திடு விழைந்திடு அன்பே!!
என் இதய கதவுகள் உன் வருகை எண்ணி திறந்திருக்கும்...

1 Comments:

Anonymous New Comer said...

Kanavu devadai innum kanava illa nijamaaaaaaaaaaaaaaaaaaa?

10:40 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home