Saturday, June 30, 2007

நித்திரை கனவு!! முத்திரை உனக்கு!!

விழிக்குள் காணும் கனவுகள்
வாழ்வில் மலர காத்திருக்கும் பூ மொட்டுகள்
கனவை நினைவாக்கு தோழா
காலம் உனக்கு கைகொடுக்கும் வாடா

வெற்றி என்பது உன் இலக்கு
அதன் இடையில் தோன்றும் தடைகளை நீ விலக்கு
கனவை நினைவாக்கு தோழா
காலம் உனக்கு கைகொடுக்கும் வாடா

தினமும் காணும் கனவு
உன் விழியில் வாழும் நினைவு
கனவை நினைவாக்கு தோழா
காலம் உனக்கு கைகொடுக்கும் வாடா

நித்திரையில் வரும் கனவு
முத்திரை பதிக்க நீ உதவு
கனவை நினைவாக்கு தோழா
காலம் உனக்கு கைகொடுக்கும் வாடா

கனவு மெய்பட வேண்டும்
இதயம் அதற்கு வசப்பட வேண்டும்
கனவை நினைவாக்கு தோழா
காலம் உனக்கு கைகொடுக்கும் வாடா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home