Tuesday, October 09, 2012

மன நிம்மதி

மன நிம்மதி வாழ்வில் தின அமைதி
அது ஓர் தொலைந்த கனா
விடை இல்லாத புதிர் வினா
நித்தம் தேடி அலைந்தேன்
பித்தம் பிடித்து தொலைந்தேன்
சினம் கொண்டது மனம்
தினம் மாண்டது நற்குணம்
நாவில் உதித்த வார்த்தை
மனதை சிதைத்த வேட்டை
அகம்பாவம் பிடித்து திரிந்தேன்
பாவம் அகம் தீயில் எறிந்து மடிந்தேன்!!!!

Sunday, July 19, 2009

எது வரை இந்த வாழ்க்கை??

கடலின் எல்லை
அலைகள் கரை சேரும் வரை!!!
பறவையின் எல்லை
சிறகுகள் சக்தி இழக்கும் வரை!!!
காற்றின் எல்லை
வெற்றிடம் இருக்கும் வரை!!!
மனிதனின் எல்லை
அறியாமல் இருப்பதுதான் மிகப்பெருந் தொல்லை!!!

குழந்தையாய் நீ அழுதாய்
தாலாட்டு பாட தாய் இருந்தாள்!!
பிரேதமாய் நீ கிடந்தாய்
அழுது புலம்ப ஊர் திரண்டது!!
வாழ்க்கையின் தொடக்கம் உணர்வதற்குள்
முடிவினை அடையும் மனிதா!!!
தொலைந்ததை தேடி செல்வதுயில்லை வாழ்க்கை
நிலைத்ததை நிறைவுடன் ஏற்பதே வாழ்க்கை!!!

விழி திறந்தாய்
புவி தெரிந்தது!!!
செவி திறந்தாய்
கல்வி பிறந்தது!!!
இதழ் திறந்தாய்
மௌனம் பறந்தது!!!
மனம் திறப்பாய்
ஞானம் பிறக்கும் வாழ்க்கை விளங்கும்!!!

Wednesday, May 27, 2009

I love being a kid...

For not a single day I had to worry about the next day...
For everyday people came to see and fondle me...
For I was the source of happiness to people surrounding me although I never knew what happiness meant...
For I cried a lot for unknown reasons which I couldn't do now for known reasons...
For I never felt that I am growing old...
For I never had to think what others think about me...
For I never knew people's ill feelings towards others...
For I smiled at all regardless of who they are...
For all those small mischievous things I did and yet managed to escape...
For only the good thoughts I had...

Oh God!! If you would ever grant me a boon all I ask for is
watch "Curious Case Of Benjamin Button" and do that to me now.

Sunday, April 12, 2009

பிறவி கடல்

ஒன்றில் இல்லாதது மற்றொன்றில் தோன்றும்
மற்றொன்றில் மறைந்தது இவ்விடத்தில் தோன்றும்

தொலைந்தததை தேடினால் கிடைத்து விடாது
கிடைத்ததை மறந்தால் தொலைந்து விடும்.

ஞானம் மறைவது அஞ்ஞானத்தில்
அஞ்ஞானம் மறைவது மெய் ஞானத்தில்

காலம் கடந்தால் சொர்க்கம் கிட்டும்
கர்மம் தொலைத்தால் பிறவி நீங்கும்

ஜீவன் தேடுவது பரமாத்ம ஸ்வரூபம்
பரமன் தேடுவது ஜீவன் சரணாகதி.

Sunday, October 26, 2008

NRI-இன் தீபாவளி

தீபங்களின் ஒளி
இந்த இனிய தீபாவளி
மக்களின் மனங்களில் பொங்கட்டும்
ஆனந்த பேரொளி!!

புத்தாடை உடுத்தி
பட்டாசு வெடித்து
இனிப்பு சுவைத்து
இனிய பேசி
மகிழ்ந்தது தாய் மண்ணில்!!

புத்தாடை மறந்து
பட்டாசை நினைத்து
இனிப்பை தேடி
தொலைபேசியில் பேசி
மகிழ்வது போல நடிபபது அந்நிய தேசத்தில்!!

கங்கா ஸ்நானம் ஆகிவிட்டாதா??
என்று உறவினர்கள் கேட்பது தாய் மண்ணில்
மீஸ்ஸிஸ்ஸிப்பி ஸ்நானம் ஆகிவிட்டதா??
என்று நண்பர்கள் கேலியாக கேட்பது அந்நிய மண்ணில்!!

மல்லிகைப் பூ சூடி
காற்றில் மணம் பரப்பி
salwar/புடவையில் வலம் வரும்
அழகு சுந்தரிகளை கண்டது தாய் மண்ணில்!!

Armani/Sensous பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு
Nausea உணர்வை வரவைத்து
Skirt/Jeans-இல் உலா வரும்
வெள்ளை அரசிகளை காண்பது அந்நிய தேசத்தில்!!


இது தான் ஒரு NRI-இன் தீபாவளி

Wednesday, May 21, 2008

பரமாத்ம வைபவம்!!

சாத்விக சரணே
ஆன்மீக பலனே!!
ஆன்மீக மனமே
ஜீவன் நலனே!!

நரணிண் பக்தி
நாரணணிந் சக்தி!!
ஆச்சார்ய உக்தி
காரிய சித்திஹீ!!

நாம சங்கீர்த்தனம்
பாப்ப விமோசனம்!!
கோவிந்த நாமம்
கோடி புண்ணியம்!!

பகவந் ப்ராப்தி
பாகவதப் ப்ரீதி!!
பரமாத்ம ப்ரபதி
ஜீவன் முக்தி!!

Monday, May 19, 2008

I/U/V?? Not Me!!

Eyes may be affected by UV
But "I" is not afflicted by you and we
As long as you don't think
"I" always precedes "U" and "V"

There is no I
There is no me
All you have this life
Can never be yours
If you see it as mine!!

There is no happiness
There is no sadness
All are reflection of emotions
That results in commotion
If you take it as your possession!!

There is no victory
There is no failure
All are test for your composure
To see if you ever remain the same
Unaffected by either of the two!!

There is no hatred
There is no animosity
All those who love themselves
To propagate their true love to others
Unaffected by the changing world!!

There is no life
There is no death
All the fears are for the mind
Not for your soul
That is eternal and not ephemeral!!