Friday, February 29, 2008

ஆண் பெண் நட்பு

கண் பார்வையில் தொடங்கியது அந்த நட்பு
பின் புன்னகையில் வளர்ந்தது அந்த நட்பு

விஷயங்களை பகிர்ந்தது அந்த நட்பு
சிறகுகள் இன்றி வானில் பறந்தது அந்த நட்பு

காலம் கடந்து மனதில் நேசம் பரப்பியது அந்த நட்பு
சிறு குறும்புகள் செய்கையில் தலையில் தட்டியது அந்த நட்பு

எதிர்பாராமல் தொடங்கிய அந்த நட்பை
எதிர்பார்பினால் முறிப்பது சரியோ?

எதிர்பார்ப்பில் நிலைப்பது அல்ல நட்பு
எதிர்ப்பிலும் நிலைமாறாமல் நிலைப்பதே நட்பு

நட்பு கரத்தை நீட்டிய என்னிடம்
காதல் பரிசை கொடுக்க நினைக்காதே!!

1 Comments:

Anonymous Anonymous said...

Ithu yaarukaaga ezhudina kavidai ???? ;-)

10:56 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home