Sunday, March 09, 2008

புன்னகை

புன்னகையே!! நீ உள்ளங்களை கவர்ந்து இழுக்கும் அழகிய தாமரையோ?
அல்லது உதடுகளில் தோன்றும் மெல்லிய வளர்பிறையோ?

புன்னகையே!! நீ வெட்கததில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியோ?
அல்லது கொண்டவரிடம் ஜொலித்து மின்னும் வைரகடிகயோ??

புன்னகையே!! நீ சிரிப்பின் பிரதிபலிப்போ??
அல்லது சந்தோஷத்தின் எதிரொலியோ?

புன்னகையே!! நீ தொடாமல் தொட்டுப் போகும் மென்மை தென்றலோ??
அல்லது விடாமல் விட்டு துரத்தும் அழகிய கண்ணியோ?

புன்னகையே!! நீ தோன்றும் ஒரு கனம்
என் தேகத்தில் ஏனோ ஓர் சிலிர்ப்பு
நான் உன்னை உணர்ந்த நேரம்
நீ என்னுள் மறைந்து விட்டாய்!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home