Monday, April 28, 2008

கோவிந்தா!! கோவிந்தா!!

அவன் ஆள்வான்
அவனே ஆளவைப்பான்!!

அவன் ஆக்குவான்
அவனே ஆகுவான்!!

அவன் காப்பான்
அவனே காக்க வைப்பான்!!

அவன் பார்ப்பான்
அவனே எதிர்பார்ப்பை தீர்ப்பான்!!

அவன் மயக்குவான்
அவனே பக்தியில் மயங்குவான்!!

அவன் சோதிப்பான்
அவனே சாதிக்க வைப்பான்!!

அவன் விரைவான்
அவனே கஷ்டங்களை விலக்குவான்!!

அவன் அன்று பார்த்தனுக்கு சாரதி
மாருதிக்கு அவனே கதி
கோவிந்த நாமம் உச்சரி
அவன் திருவடிகளில் நீ சரணாகதி
உனக்கு அளித்திடுவான் முக்தி!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home