Tuesday, April 22, 2008

ஆசை- அடுக்க முடியும்!அடக்க முடியுமா?

கண் இருந்தும் குருடர்கள்
பொன் இருந்தும் ஏழைகள்
தனத்தை தானம் செய்ய மறுத்து
நிதானத்தை மறக்கும் மனித அற்பர்கள்!!

பேதையை போதையாக பார்த்து
மனதை மண்ணில் புதைத்து
பாசம் நேசம் என்ற போர்வையில்
ஆபாச எண்ணத்தில் திரியும் மனித வஞ்சகர்கள்!!

கண்ணில் வழியும் கண்ணீருக்கே விலை பேசி
மண்ணில் பல அதர்மங்களுக்கு விதை போட்டு
நியாயம், அநியாயம் பற்றி நா கூசாமல் உரையாடி
மார்பில் மார்த்தட்டிக் கொள்ளும் மானிட கயவர்கள்!!

மரணப் படுக்கையில் மறத்து கிடக்க
அடுத்த நிலை என்னவென்று தெரியாமல் இருக்க
தேகத்தை எரிக்கும் தீ அடங்கினாலும்
ஆசைகள் மட்டும் அடங்குவதில்லை மனிதனுக்கு!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home